Monday, November 10, 2025

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண.... #திருப்புகழ்

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென . முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்  பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ
 ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர் செய்யவல்ல பெருமாளே.

குறிப்பு:

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.

* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.

** அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்.

Sunday, November 9, 2025

நம்பிக்கை என்பது நிழல் போல் மாறும், நம்பிக்கை என்பது தனிப்பட்டது ,நம்பிக்கைக்கு சண்டை வேண்டாம்

என் மனதில் ஒளிரும் தெய்வம் ஒன்று, உன் உள்ளத்தில் வெறுமை தான் என்றாலும், வழி வேறு, வாழ்க்கை வேறு, நாம் இருவரும், ஒரே பூமியில் சுவாசிக்கும் உயிர்கள். கோவில் மணி ஒலிக்கும் என் உலகில், அதை வெறும் சத்தமாக பார்க்கும் உன் உலகம், ஆனால் ஏன் இந்த வாக்குவாதம்? நம்பிக்கை என்பது தனிப்பட்டது, தோழா! என் நம்பிக்கை எனக்கு, கடவுள் இல்லை என்று சொல்லும் நம்பிக்கை உனக்கு, உன் நம்பிக்கையை என்மீது திணிக்க வேண்டாம், என் நம்பிக்கையை உன்மீது திணிக்க மாட்டேன் நான். அமைதியாய் வாழ்வோம், அன்பாய் பேசுவோம், நம்பிக்கைகள் வேறு, மனிதர்கள் ஒன்று! உன் கேள்விகள் அறிவைத் தேடும் பயணம், என் பிரார்த்தனை ஆறுதல் தரும் தோணி, இரண்டும் சரி, யார் சொல்வார் தவறு? உலகம் பெரியது, வாழ்க்கை அழகு. புத்தகங்கள் உன் கடவுள் என்றாலும், இயற்கை என் இறைவன் என்றாலும், மரியாதை கொடுத்து நடப்போம், நம்பிக்கைக்கு சண்டை வேண்டாம்! என் நம்பிக்கை எனக்கு, கடவுள் இல்லை என்று சொல்லும் நம்பிக்கை உனக்கு, உன் நம்பிக்கையை என்மீது திணிக்க வேண்டாம், என் நம்பிக்கையை உன்மீது திணிக்க மாட்டேன் நான். அமைதியாய் வாழ்வோம், அன்பாய் பேசுவோம், நம்பிக்கைகள் வேறு, மனிதர்கள் ஒன்று! ஒரு நாள் உணர்வோம், உண்மை என்பது பல வண்ணம், நம்பிக்கை என்பது நிழல் போல் மாறும், ஆனால் அன்பு மட்டும் நிரந்தரம், வாழ்க்கையை கொண்டாடுவோம், தோழா!

 

Monday, November 3, 2025

இறவாமற் பிறவாமல் (அவிநாசி) திருப்புகழ்

 இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே. இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே. இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே. இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே. இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.

குருதி புலால் என்பு (திருவானைக்கா) திருப்புகழ்

 குருதிபு லாலென்பு தோன ரம்புகள்

கிருமிகள் மாலம்பி சீத மண்டிய குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன பொதிகாயக் குடிலிடை யோரைந்து வேட ரைம்புல அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய அதனாலே சுருதிபு ராணங்க ளாக மம்பகர் சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான மொன்றையு முயலாதே சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும் நிருதரு மாவுங்க லோல சிந்துவும் உடைபட மோதுங்கு மார பங்கய கரவீரா உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள் அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள் உளமதில் நாளுங்க லாவி யின்புற வுறைவோனே கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் அரிகரி கோவிந்த கேச வென்றிரு கழல்தொழு சீரங்க ராச னண்புறு மருகோனே கமலனு மாகண்ட லாதி யண்டரு மெமது பிரானென்று தாள்வ ணங்கிய கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் பெருமாளே.

சரண கமலாலயத்தை (சுவாமிமலை) திருப்புகழ்

 சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் முருகோனே.

இருவினை அஞ்ச (திருவருணை) திருப்புகழ்

 இருவினை யஞ்ச மலவகை மங்க

இருள்பிணி மங்க மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட விடையேறி சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் பெருமாளே.

சிவமாதுடனே (திருவருணை) திருப்புகழ்

 சிவமா துடனே அநுபோ கமதாய்

சிவஞா னமுதே பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலா மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா அருள்வாயே தவலோ கமெலா முறையோ வெனவே தழல்வேல் கொடுபோ யசுராரைத் தலைதூள் படஏழ் கடல்தூள் படமா தவம்வாழ் வுறவே விடுவோனே கவர்பூ வடிவாள் குறமா துடன்மால் கடனா மெனவே அணைமார்பா கடையேன் மிடிதூள் படநோய் விடவே கனல்மால் வரைசேர் பெருமாளே.

அல்லல் போம் வல்வினை போம்.....

  அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் – நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும் செல்வ கணபத...