Thursday, December 21, 2023

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்....

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...

பனியில்லாத மார்கழியா..

Monday, November 6, 2023

Vishnu Sahasranamam (விஷ்ணு சஹஸ்ரநாமம்) with Tamil Lyrics

ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம்

பாடல் வரிகள் விளக்கத்துடன் 

கந்தர் சஷ்டி கவசம்

Sunday, October 15, 2023

சகலகலாவல்லி மாலை

கல்வியில் சிறந்து விளங்க, குமரகுருபரருக்கு வேண்டிய கலைகளை அருளிய சகலகலாவல்லி மாலையின் (sakalakalavalli maalai tamil lyrics) பத்துப் பாடல்களையும் பாடி, சரஸ்வதிதேவியை மனதார வழிபட அன்னையின் அருள் கிடைக்கும் என்பது பெரிய நம்பிக்கை… இந்த சகலகலாவல்லி மாலை பாடல் வரிகளின் கிழே சகலகலாவல்லி மாலை பாடல் பிறந்த கதை / வரலாறு பதிவு செய்துள்ளோம்.

சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

சகலகலாவல்லிமாலை பிறந்த கதை​

குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாத்ஷாவாக இருந்தார்.
அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி ‘சகலகலாவல்லி மாலை’யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் ‘காசிமடம்’ என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.

திருமண வரம் தரும். திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியபரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்

கந்தர் அனுபூதி

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பகை கடிதல்

இடரினும் தளரினும் பாடல் || திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

Shreem Brzee Mantra

Wednesday, August 2, 2023

Subramaniya Pujangam -சுப்பரமணிய புஜங்கம்

#திருப்புகழ் அருணகிரிநாதரை புகழ்ந்து கவிஞர் #கண்ணதாசன் எழுதிய கவிதை.

திரு அருணகிரிநாதர் அருளிய திருவாவினன்குடி #திருப்புகழ்

Kumarasthavam Lyrics in Tamil

அருள்வாய் முருகா..ஓம் முருகா.

குருவாய் வந்து அருள்வாய் முருகா..ஓம் முருகா.


 

Thursday, July 20, 2023

Guru Ashtakam - Adi Guru Shankaracharya JI


 

Saturday, June 17, 2023

Jai Jagannath

திருப்புகழ் - அருணகிரிநாதர். வாலவயதாகி (இராமேசுரம்)

Friday, June 9, 2023

சக்திவாய்ந்த அகத்தியர் அருளிய திருமகள் துதி

அகத்தியர் அருளிய லட்சுமி துதி

மூவுலகம் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித் தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும் பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சு கின்றான் மூன்று உலகங்களுக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிரை ஒழிக்கின்றதும், பூவையொத்த மென்மையான, அழகிய உடலை கொண்ட அருட் கடவுளான திருமாலின் மார்பில் தோன்றிய தாயே, தேவர் உலகத்திலும் சிறப்பான புகழ்மிக்க கொல்லாபுரம் ஊரில் சேர்ந்து இனிதாக வீற்றிருக்கும் பாவையாகிய திருமகளின் இரண்டு திரு அடிகளையும் வணங்கி, பழைமையான சாத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து குரு முனிவரான அகத்திய முனிவர் பாடுகின்றார். கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டி லுறை கொள்கைபோல மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்த்தெந் நாளுங் கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய். தேனிற்காக வரும் வண்டினம் பண்களை பாடுவதற்கு இடமாக இருக்கும் தாமரை மலரின் கொட்டையில் உறைகின்ற தத்துவம் போன்ற மழை நீர் நிரம்பிய கருமுகிலினை ஒத்த நிறத்தினையுடைய திருவுடம்பினையுடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழுகின்ற மான் போன்ற அருட்பார்வை கொண்ட திருமகளே. உலகம் முழுவதும் உனது அருளினால் தீன்றிய அருட்கொடியே. என்னாளும் உனை மறவாது தாமரை மலர் போல் இரு காரமும் குவித்து உன்னை மிகுந்த காதலோடு அதாவது மிகுந்த அன்போடு வணங்குபவர்களின் தீவினை தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே! கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன் தனையீன்ற விந்தை தூய அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத் திமிரமகன் றிடவொளிருஞ் செஞ்சுடரே எனவணங்குஞ் செய்வான் மன்னோ. தாமரை மலர் போன்ற கண்ணுடைய திருமகளே. அழகிய மறுவமைந்த மார்பினை உடைய திருமாலின் இல்லத்தரசியே. செழுமை நிறைந்த தாமரை மலரினை ஒத்த கையினை உடையவளே, செந்நிறமான விமலையே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கும் வேனிற் காலத்திற்குரியவனான காமனைப் பெற்றவளே, தூய்மையான அமுதகலசத்தை ஏந்திய பூ போன்ற மென்மையான கையினை உடையவளே, பாற்கடலில் பிறந்தவளே, அன்பர்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஒளிரச் செய்யும் செழுமையான பேரொளியே என்று போற்றி வணக்கிறேன். மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன் கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாம் காவல் பூண்டான் படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும் துடைத்தனன்நின் பெருங் கீர்த்தி எம்மனோ ரால் எடுத்துச் சொல்லாற் பாற்றோ. அழகிய இதழ்களையுடைய நல்ல மணமுள்ள தாமரை பூக் கொட்டையில் அரசாயிருக்கும் நற்பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய மயில் போன்றவளே, மற்றும் உன் கடைக்கண் பாரரவை அருள் பெற்றல்லவா நீல மணி நிறத்தினையுடைய திருமால் உலகையெல்லாம் காக்கும் தொழிலை மேற்கொண்டார். நான்கு முகக்கடவுள் படைத்தல் தொழிலை செய்தார். பசுமையான பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும் அழித்தற் தொழிலைச் செய்தார். நின் பெருங் கீர்த்தி என்னை போன்றோரால் எப்படி எடுத்துச் சொல்ல முடியும் மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும் கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும் வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும் அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள்நோக்கம் அடைந்துளாரே. வளம் பொருந்திய பரந்த பூமி முழுவதையும் பொதுவானவற்றிலிருந்து விலகி தனியே ஆட்சி செய்யும் அரசர்கள் தானும், கல்வியிலும், பெரிய அறிவிலும், மிகுந்த அழகிலும் சிறந்து விளங்குவோரும், வெல்லுகிற படையினால் பகைவர்களை துரத்தி கொடிய போரில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் தானும், தாமரை மலரின் அகவிதழாம் அல்லி வட்டத்தினுள் உள்ள கொட்டையின் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளாம் தங்களின் திருஅருளைப் பெற்றவர்களே ஆவர். செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும் எழில்மேனித் திருவே வேலை அங்கண்உள்ள கிருள்துலக்கும் அலர்கதிர் வெண்மதியாய் அமரர்க் கூட்டும் பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங்கானில் பொருப்பில் மண்ணில் எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்ப தம்மா. செந்தாமரை மலரின் பொன்னிறமான மகரந்தத்தை போல் சிறந்து ஒளிரும் அழகிய எழில் மேனியினளே திருமகளே, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் இருளை விரட்டும் சூரியனாய், வெண்மையான சந்திரனாய், தேவர்களை மகிழ்விக்கும் பொங்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே! நீண்ட காட்டில், மலையில், நிலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செல்வ வளம் சிறப்பாக ஓங்கி இருக்கிறதம்மா. பலன்: என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும் இருநிலத்தில் இறைஞ்சலோடும் நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய் இத்துதியை நவின்றோர் யாரும் பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவோர் ஈங்கிதனைப் பொறித்த ஏடு மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு தவ்வை அவண் மருவல் செய்யாள். என்று திருமகளை புகழ்ந்து பாடிய தமிழிற்கு இலக்கணம் செய்த குறு முனியாகிய அகத்திய முனிவர் தனது மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கலானார். அங்கு தோன்றிய திருமகளும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வல்லவனே நீ என்னை புகழ்ந்து பாடிய பாடலிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்பாடல்களை முறைப்படி படிப்பவர்கள் பெரிய இன்பத்தை அனுபவிப்பார்கள். என்னை புகழ்ந்த இந்த பாடல்கள் எழுதிய ஏடு யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிற்கு வறுமையைத் தரும் எனது தமக்கையானவள் வரமாட்டாள் என வரமளித்தார்கள்..


 

ஏகதந்தாய வக்ரதுண்டாய.................

ஶ்ரீ சனி ஸ்தோத்ரம்

Friday, June 2, 2023

Maha Sudarshana Mantra

Om Om Krishnaaya Govindaaya Gopeejana Vallabhaya Paraya Param Purushaaya Paramathmane Para Karma Manthtra Yanthra Tanthra Manthtra Oushadha Astra Shastrani Samhara Samhara Mrithiyur Mochaya Mochaya Ayur Vardhaya Vardhaya Shatru Nashaya Nashaya Om Namo Bhagavathey Maha Sudarshanaya Deepthrey Jwala Pareethaya Sarwa Digkshobhanakaraye Hum Phat Para Bhrahmaney Param Jyothishe Swaha

 


 

அருணகிரிநாதர் #திருப்புகழ் - முத்தைத்தரு பாடல் விளக்கம்

Tuesday, May 30, 2023

இருவர் மயலோ - திருவருணை திருப்புகழ்

இருவர் மயலோ - திருவருணை திருப்புகழ்

.... சொல் விளக்கம் ......... இருவர் மயலோ ... வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவியர் மீது நீ கொண்ட ஆசையோ? அமளி விதமோ ... அல்லது உன் திருக்கோயில்களில் விதவிதமாக நடக்கும் ஆரவாரங்களோ? எனென செயலோ ... வேறு என்னென்ன நிகழ்ச்சிகளோ? (எனக்குத் தெரியாது) அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் ... உன்னை 

அணுகமுடியாத முநிவர், பிரமன், மால், தேவர், அடியார் இசையும் ஒலிதான் இவைகேளாது ... இத்தனை பேரும் முறையிடும் ஒலிகள் என் செவியில் விழாதபோது, ஒருவன் அடியேன் அலறு மொழிதான் ... யான் ஒருவன் மட்டும் தனியாக இங்கே அலறும் மொழிகளைப் பற்றி ஒருவர் பரிவாய் மொழிவாரோ ... யாரேனும் ஒருவர் அன்போடு வந்து உன்னிடம் தெரிவிப்பார்களோ? உனது பததூள் புவன கிரிதான் ... உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம். உனது கிருபாகரம் ஏதோ ... அப்படியென்றால் உன் திருவருள் எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்). பரம குருவாய் அணுவில் அசைவாய் ... மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய், பவன முதலாகிய பூதப் படையும் உடையாய் ... காற்று முதலிய ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே, சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா ... எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே, அரியும் அயனோடு அபயம் எனவே ... திருமாலும், பிரம்மனும் உன்னிடம் அடைக்கலம் புக, அயிலை யிருள்மேல் விடுவோனே ... உன் வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த சூரன்மேல் செலுத்தியவனே, அடிமை கொடுநோய் பொடிகள் படவே ... இவ்வடியேனுக்கு ஏற்பட்ட தொழுநோயைத் தூளாக்கிய* அருண கிரிவாழ் பெருமாளே. ... திருவண்ணாமலையில் வாழ்கின்ற பெருமாளே. * அருணகிரிநாதர் வாழ்க்கையில் அவருக்கு உற்ற தொழுநோயை முருகனது அருள் முற்றிலும் குணப்படுத்திய நிகழ்ச்சி இங்கு பேசப்படுகிறது. 

கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் – ” நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி”

Saturday, May 27, 2023

கருப்பு கவனி அரிசி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவ பயன்கள்

Dr.Sivaraman speech on walking | நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

#திருப்புகழ் #அருணகிரிநாதர் - கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி

திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்ச்சி #பிராணாயாமம்

Monday, May 15, 2023

திரு அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு.

Thiruppugazh Palani Arumugam Arumugam திருப்புகழ் ஆறுமுகம் ஆறுமுகம் பழநி

எண்கண் திருப்புகழ்

சண்முக கவசம்

சண்முக கவசம் விளக்கம்

அனைத்து நோய்களையும் தீர்க்க வல்ல ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்

திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம் - சினத்தவர் முடிக்கும்.....

கந்தர் அனுபூதி

Sunday, May 7, 2023

மனதில் உறுதி வேண்டும் . #பாரதியார்


 

Kandar Shashti Kavacham

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல் மந்திரம்

நன்மையும் தீமையும் கலந்தது தான் வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் நண்பனும் எதிரியும் நம் அருகிலேயே தான் இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் ஒருவன் தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இப்படி கூறுவதால் எதிரியை அழிக்க தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை நமக்கு நன்மை செய்பவர்கள் யார்,தீமை செய்பவர்கள் யார் என்ற புரிதல் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் எதிரியை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுவதற்கான பொருள். சரி நாம் அவர்களை பற்றி கருத்தில் கொள்ளாமல் நம் பணிகளை செவ்வனே செய்து கொண்டு செல்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் நமக்கு எதிரியானவர்கள் நம்மை அப்படி பாவிக்கிறார்களா நிச்சயமாக மாட்டார்கள் அவர்கள் நமக்கு கெடுதல் செய்வதால் தானே நமக்கு எதிரிகளாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் சரிக்கு சமமாக நாமும் எதுவும் செய்யாமல் இந்த ஒரு மந்திரத்தை கூறி இந்த தெய்வத்தை சரணடைந்தாலே போதும். அந்த தெய்வம் வேறு யாரும் இல்லை அது கந்த கடவுள் தான். அந்த மந்திரம் பகை கடிதல்.

மற்ற தெய்வங்கள் எல்லாம் இருக்கும் போது இவரை மட்டும் எதற்கு நாம் சரணடைய வேண்டும். இவர் மட்டும் தான் எதிரிகளை நம்மை நெருங்க விடாமல் காப்பாற்றுவரா, மற்ற தெய்வங்கள் காக்க மாட்டார்களா என்றால் அனைத்து தெய்வங்களும் காக்க தான் செய்வார்கள் இதில் சந்தேகம் இல்லை. ஆனால் சில தெய்வங்கள் சில விஷயங்களுக்கு முதற் கடவுளாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த கந்த பெருமான் எதிரிகளை இல்லாமலே செய்து விடும் சூரசம்ஹார மூர்த்தியாக விளங்குபவர். அதனால் தான் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட இவரை அணுக வேண்டும் என்று கூறுவதற்கான காரணம்.Sunday, April 30, 2023

Thiruppugazh (Thirupugal) dedicated to Lord Murugan,

Thursday, April 20, 2023

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் தொகுத்து அருளிய வேல் மாறல் மகா மந்திரம்


வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

       ... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )

( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )

  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )

        தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
        கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
        நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
        பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

        வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
        தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
        குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
        தொளைத்தவேல் உண்டே துணை.

       ... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

 

Sudha Murthy's first speech in Rajya Sabha

Sudha Murthy, in her maiden speech in the Rajya Sabha, highlighted two key issues: advocating for a government-sponsored vaccination program...