
“Living a simple life doesn’t just mean giving up your possessions. Choosing simplification creates a life filled with meaning, a life lived on your own terms. Gather Rich Knowledge, Breathe, think, feel, decide and act. This is a simple sequence that you should integrate into your daily life. "Knowledge echoes all around you. Simply, listen, and inhale it in. Listening to others is the easiest way to gain knowledge about something" . Everywhere we look, we find science. It is beautiful.
Sunday, March 15, 2026
ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம்

Saturday, March 14, 2026
நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம்
நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம்
நிலம் – வளம் – கொள்ளைக்கான யுத்தம் உலகில் எல்லாப் போர்களும்... வளக் கொள்ளைக்கே... வளக் கொள்ளைக்கே... மிளகும் ஏலமும் மணம் தூவி வெள்ளைக்காரனை கரை சேர்த்தது ஞான ஒளியும் தவ ஒளியும் சீனரை இங்கு இழுத்து வந்தது
Tuesday, March 10, 2026
இரு சக்கரம் ஓட்டும் நண்பா... கவனம்... கவனம்... கவனம்.
இரு சக்கரம் ஓட்டும் நண்பா... மெதுவா போடா
வலது இடது பார்த்து... உயிரை காப்பாத்து போடா
வீட்டில் காத்திருக்காங்க... கண்ணீர் வைத்து நினைச்சு
அவசரப்பட்டு போனா... எல்லாம் போயிடும் ராஜா
ஹெல்மெட் போடு மறக்காதே
சிக்னல் சிவப்புனா நில்லு தம்பி
முந்தி செல்ல நினைக்காதே
ஒரு வினாடி தப்பு... ஆயுசு முடிஞ்சு போகும்....
கண்ணு முன்னாடி ரோடு தான்
பின்னாடி பார்க்கிற மிரர்-ல தான்
எதிராளி வரானோ... லாரி வருதோ
எல்லாத்தையும் பாரு... உயிர் முக்கியம்டா
இரு சக்கரம் ஓட்டும் நண்பா... மெதுவா போடா
வலது இடது பார்த்து... உயிரை காப்பாத்து போடா
பிள்ளை சிரிச்சு கை காட்டுது
அம்மா கதவு திறந்து நிக்குது
அப்பா போன் எடுத்து கேக்குறாரு
"எப்ப வருவே?"னு... குரல் நடுங்குது
அந்த குரலுக்கு... உயிர் கொடு
அந்த சிரிப்புக்கு... பாதுகாப்பு கொடு
வேகம் குறைச்சு... புன்னகை வைச்சு
வீட்டுக்கு திரும்பு... பாதுகாப்பா வா
ரோடு எல்லாருக்கும் பொதுவானது
ஆனா உயிர் உனக்கு ஒண்ணுதான்
அதை இழக்க வேண்டாம்... தயவு பண்ணு
போக்குவரத்து விதி... உன் கவசம்டா
இரு சக்கர வீரரே... கவனமா ஓடு
வேகத்தை கட்டுப்படுத்து... உயிரை காத்துக்கோ
வீட்டுக்கு சிரிச்சு... திரும்பி வா
எல்லாரும் காத்திருக்காங்க... பாதுகாப்பா வா
கவனம்... கவனம்... கவனம்...
உயிருக்கு மேலே... எதுவும் இல்லை...
பாதுகாப்பு மட்டுமே... உன் வெற்றி
அவசரப்பட்டு போகாதே.
மருத்துவமனை நாட்கள் நீண்டு போகும்.
கவனம்... கவனம்... கவனம்...
உயிருக்கு மேலே... எதுவும் இல்லை...
பாதுகாப்பு மட்டுமே... உன் வெற்றி
காத்திரு, நண்பா, சாலையில் செல்லும்போது—
இடரினும் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன். திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே இதுவோ எமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே ...
Sunday, March 1, 2026
மயிலும் வாகனம் ஆகியதால், விரைந்து நீயும் வந்துவிடு!மயிலே, மயிலே என்றழைத்தால், அங்கே நீயும் இருப்பாயே
சூரர் படையை அழித்தவனே! தேவர் குலத்தை காத்தவனே. ! திருச்செந்தூர்க் கடலலை ஆண்டவனே! சூரன் உடலும் கிழிந்தவுடன், வேலும் மயிலும் ஆனதுவே.! சேவலை கொடியாய் பெற்றவனே, மயிலும் வாகனமாகியதே! மயிலும் வாகனம் ஆகியதால், விரைந்து நீ வந்துவிடு! மயிலே, மயிலே என்றழைத்தால், அங்கே நீயும் இருப்பாயே !
அவ்வை பாட்டியை சோதிக்க, நாவல் மரத்தின் மேலேறி, சுட்ட பழத்தை தந்தவனே ! சுகமாய் காட்சி தந்திடுவாய்......! மாங்கனி பெற வேண்டி., உலகை வலமாய் வந்தவனே.! அம்மை, அப்பனே, உலகம் என்று அண்ணனும் நமக்குச் சொன்னானே. ... அதுவும் உனக்கும் தெரியுமன்றோ, தெரிந்து நீயும் எமக்காகப், பழனி மலையின் மீதமர்ந்து பக்தருக்கு அருள அங்கு வந்தாய்..! தையல் நாயகி பெற்ற மகன் செல்வமுத்து குமரனவன் ! அழியா செல்வம் பெற்றிடவே, அருகில் என்றும் இருந்திடுவாய் ! முருகா, முருகா, வேல் முருகா, வெற்றிகள் தருவாய், வேல்முருகா! முருகா, முருகா, வேல் முருகா, வெற்றிகள் தருவாய், வேல்முருகா! வெற்றி வேலை பெற்றதினால், உன்னை பணியும் பக்தர்க்கு, என்றும் வெற்றி, வெற்றியன்றோ? வேல் வேல் முருகா, வேல் முருகா ! திருப்பரங்குன்றத்தில் கல்யாணம். தெய்வானையுடன் நடந்தது வே ! வாழ்த்திட வந்தனர், தேவர்களும், வாழிய, வாழிய, வாழியவே !
அதிகாலை சங்கின் நாதத்திலே, ஓம் என்னும் ஒலியே கேட்கிறது ! ஓங்கார பொருளும் ஆனவனே. ஹர ஹர சிவனே, சண்முகனே! பாம்பன் சுவாமிகள், அருணகிரி, தெய்வப் புலவன் நக்கீரன் , இவர்கள் பாட்டுக்கு வந்து விட்டாய், எங்கள் பாட்டுக்கும் வந்து விடு!
பாம்பன் சுவாமிகள், அருணகிரி, தெய்வப் புலவன் நக்கீரன் , இவர்கள் பாட்டுக்கு வந்து விட்டாய், எங்கள் பாட்டுக்கும் வந்து விடு! இச்சா சக்தி தெய்வானை, கிரியா சக்தி வள்ளியுடன் பழமுதிர் சோலையில் இருப்பவனே வாழுகிறோம் நாங்களும் வந்துவிடு !
அங்கே பாருங்கள் எல்லோரும் பச்சை மயிலும் தெரிகிறது வேலுடன் முருகன் வருகின்றார்! பச்சை மயிலும் தெரிகிறது வேலுடன் முருகன் வருகின்றார் ! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே முருகா முருகா வேல் முருகா ! வெற்றிகள் தருவாய் வேல் முருகா ! முருகா முருகா வேல் முருகா வெற்றிகள் தருவாய் வேல் முருகா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
The four Vedas are the oldest sacred books of the Vedic tradition. Each one had a job in the sacrifice.
Rigveda. A book of hymns. Poets praise Agni, the fire, Indra, the warrior god, and Soma, the sacred drink, and ask them to come to the of...
