Monday, November 3, 2025

இருவினை அஞ்ச (திருவருணை) திருப்புகழ்

 இருவினை யஞ்ச மலவகை மங்க

இருள்பிணி மங்க மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட விடையேறி சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் பெருமாளே.

நீ போகும் பாதை நல்லதாக நித்திய கர்மங்கள் செய்ய வேண்டும்

நடக்க நல்ல பாதை வேண்டுமானால் ஒருவன் அதை அமைத்து வைத்திருக்க வேண்டும் நல்ல உணவு வேண்டுமானால் ஒருவன் அதை சமைத்து வைத்திருக்க வேண்டும் ...