Monday, August 12, 2024

உண்மை , பணிவு

Vegetarian #Vegetables #காய்கரி

Varuna Mudra

Prana Mudra

Sunday, August 11, 2024

திருவாசகம் - திருப்பொன்னூசல்


திருவாசகம் திருப்பொன்னூசல்
----------------------------------------------------
பாடல் எண் 1
சீர்-ஆர் பவளங்-கால் முத்தம் கயிறாக
ஏர்-ஆரும் பொற்பலகை ஏறி இனிது-அமர்ந்து
நாரா யணன்-அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்து-அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்-தாள் இணை-பாடி
போர்-ஆர்-வேற் கண்-மடவீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 2
மூன்று-அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன் தங்கித் தித்தித்து அமுது-ஊறித் தான்-தெளிந்து-அங்கு
ஊன் தங்கி நின்று-உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குல-மஞ்ஞை
போன்று-அங்கு அன-நடையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 3
முன்-ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்-குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்-நிற்பத்
தன்-நீறு எனக்கு-அருளித் தன்-கருணை வெள்ளத்து
மன்-ஊற மன்னு-மணி உத்தர கோசமங்கை
மின்-ஏறு மாட வியன்-மாளிகை பாடிப்
பொன்-ஏறு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 4
நஞ்சு-அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு-தோய் மாட-மணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று-அமுதம் ஊறிக் கருணை-செய்து
துஞ்சல் பிறப்பு-அறுப்பான் தூய புகழ்-பாடிப்
புஞ்சம்-ஆர் வெள்-வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 5
ஆணோ அலியோ அரிவையோ என்று-இருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்-குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டு-அருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோண்-ஆர் பிறைச்-சென்னிக் கூத்தன் குணம்-பரவிப்
பூண்-ஆர் வன-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 6
மாது-ஆடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாது-ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்-பிறவித்
தீது-ஓடா வண்ணம் திகழப் பிறப்பு-அறுப்பான்
காது-ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது-ஆடு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 7
உன்னற்கு அரிய-திரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்-புகழே
பன்னிப் பணிந்து-இறைஞ்சப் பாவங்கள் பற்று-அறுப்பான்
அன்னத்தின் மேல்-ஏறி ஆடும்-அணி மயில்-போல்
என்-அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்-பாடிப்
பொன்-ஒத்த பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 8
கோல வரைக்-குடுமி வந்து குவலயத்து
சால அமுது-உண்டு தாழ்-கடலின் மீது-எழுந்து
ஞாலம் மிகப்-பரிமேற் கொண்டு நமை-ஆண்டான்
சீலம் திகழும் திரு-உத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்-பாடிப்
பூலித்து அகங்-குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 9
தெங்கு-லவு சோலைத் திரு-த்தர கோசமங்கை
தங்கு-லவு சோதித் தனி-ருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு-றுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்கு-லவு கோதையும் தானும் பணி-கொண்ட
கொங்கு-லவு கொன்றைச் சடையான் குணம்-பரவிப்
பொங்கு-லவு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

Saturday, August 10, 2024

Pudhea Paadhai

Manikarnika Ashtakam With Lyrics | Goddess Manikarnika Chant | Most Powerful Mantra

தர்ப்பணம் செய்து முடிந்ததும் சொல்ல வேண்டிய மணிகர்ணிகா அஷ்டகம் 

 தர்ப்பணம் செய்து முடிந்ததும் ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்லிய ஸ்ரீ மணிகர்ணிகா அஷ்டகம் என்ற துதியை மணிகர்ணிகா குளத்தில் குளித்த பிறகு கூற வேண்டும்.

அவ்வாறு வழிபட்டு பித்ரு தர்ப்பணமும் செய்பவர்கள் சவுபாக்கிய வாழ்வை பெற்று இறை நலம் பெறுவார்கள். நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.

1. வாரணாசி (காசியில்) விஸ்வநாதர் கோவிலில்- மணிகர்ணிகா கட்டம்.
 2. மதுரை திருப்புவனம்- பூவணநாதர் கோவிலில் மணிகணிகாகுளம். 
3. தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் தர்ப்பாண்யேஸ்வரர் கோவிலில் மணிகர்ணிகா கங்கை
4. சென்னை திருநீர்மலை ரங்கநாதர் கோவில் மலை அடி வாரத்தில் -மணிகர்ணிகா திருக்குளம் என்னும் புஷ்கரணி.

கந்தனுக்கு சரவணப் பொய்கையையே புனித நீரூற்று என்பது போன்று காசிக்கு சென்று மகாளய தர்ப்பணம் செய்த முழுப்பலனையும் பெற்றிட அவரவர் தகப்பனாரின் திதி நாளன்று மேற்சொன்ன மணிகர்ணிகாகளில் தர்ப்பணம் செய்தோ, அல்லது மகாளய அமாவாசையிலோ தர்ப்பண பூஜை செய்து மணிகர்ணிகா அஷ்டகத்துதியை மூன்று முறை படிக்க வேண்டும்.

அல்லல் போம் வல்வினை போம்.....

  அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் – நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும் செல்வ கணபத...