Sunday, March 15, 2026

ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம்



ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம் இது, என் சொத்து என் உயிர் எல்லாம் நாட்டின் கையில் தான்! புகையாகி மறையும் ஒரு நொடியில், தேசம் வலுவாக இருந்தால் தான் நான் பாதுகாப்பு! என் சம்பளம், என் வீடு, என் கார், என் தொழில், தென்னந்தோப்பு, உறவுகள், கால்நடை எல்லாம்… நாடு பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே சொந்தம், இல்லையென்றால் ஒரு சிங்கிள் டீக்கு அலைவதற்கு நேரம் போதாது! உக்ரைன் மக்கள் இரண்டு மில்லியன் பேர், எல்லாம் விட்டு எல்லை தாண்டி அகதியானாரே… அண்டை நாட்டார் அடைக்கலம் கொடுத்த அதிர்ஷ்டம், நமக்கு அப்படி யார் இருக்கா? சொல்லு பாரு! ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம் இது, என் சொத்து என் உயிர் எல்லாம் நாட்டின் கையில் தான்! புகையாகி மறையும் ஒரு நொடியில், தேசம் வலுவாக இருந்தால் தான் நான் பாதுகாப்பு! மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்கதேசம், தெற்கே இந்தியப் பெருங்கடல், வடக்கே சீனா… நாட்டுக்குள் எண்ணற்ற துரோகிகள், அடைக்கலம் தர வேறு நாடு இல்லையே! எங்கே ஓடுவோம்? யாரிடம் கையேந்துவோம்? நினைத்துப் பாரு… இது உன் தாய்நாடு! மலிவான அரசியல், இலவசங்கள், வாக்கு வேட்டை… இவற்றை விட்டு வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடு! அரசுக்கு துணை நில், தேசத்துக்கு உயிர் கொடு, என் தேசம் என் பாதுகாப்பு – இது என் உறுதி! ரஷ்யா உக்ரைன் போரில் கற்ற பாடம் இது, என் சொத்து என் உயிர் எல்லாம் நாட்டின் கையில் தான்! புகையாகி மறையும் ஒரு நொடியில், **என் தேசம்… என் பாதுகாப்பு!** **என் தேசம்… என் பாதுகாப்பு!** **ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்!**

Dignity of the Underestimated

  "Dignity of the Underestimated" is a reflective article written by K. Annamalai (the former IPS officer and BJP leader from T...