Saturday, March 14, 2026

நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம்

 நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம்

நிலம் – வளம் – கொள்ளைக்கான யுத்தம் உலகில் எல்லாப் போர்களும்... வளக் கொள்ளைக்கே... வளக் கொள்ளைக்கே... மிளகும் ஏலமும் மணம் தூவி வெள்ளைக்காரனை கரை சேர்த்தது ஞான ஒளியும் தவ ஒளியும் சீனரை இங்கு இழுத்து வந்தது
உழைப்பின் மாண்பும் உயர் குணமும் பாரசீகனை நிலை நாட்டியது எளிமை – பொறுமை – கருணை – இரக்கம் அன்பின் தொட்டிலாய் நம் நாடு ஜொலித்தது நிதமொரு யுத்தம்... ஓயாத யுத்தம் நிலம் – வளம் – கொள்ளைக்கான யுத்தம் தியாகம் தெய்வீகம் திரண்டு நின்று விருந்தோம்பல் மலர்ந்து பூத்தது பதிவிரதம் பெண்ணின் பெருமை உழைப்பும் அறமும் உலகை அழைத்தது
பன்முகம் தான் அமைதியின் வழி ஒற்றுமை தான் வாழ்வின் அடி இதை உலகிற்கு உணர்த்தியது நம் பாரத மண்ணின் பெருமைதான் எல்லாம் வணிகம்... எதுவும் வணிகம் சிரிப்பும் அழுகையும் வணிகமே அணைப்பும் அடியும் வணிகமே சேர்வதும் பிரிவதும் வணிகமே
மனிதன் பிறந்த கருவறையில் தொடங்கிய யுத்தம்... கல்லறையில் முடியாமல் நீண்டு கொண்டே இருக்குது... நிதமொரு யுத்தம்... நில வளங்களுக்கான யுத்தம்... உலகில் எல்லாமே... வளக் கொள்ளைக்கான யுத்தமே... ஒற்றுமை தான் வாழ்வின் அடி இதை உலகிற்கு உணர்த்தியது நம் பாரத மண்ணின் பெருமைதான்.

மருத மலை முருகா… மருதமலை முருகா (Marutha Malai Murugan Song)

மருத மலை முருகா… மருதமலை முருகா வேல் வீசும் வடிவேலா… அருள் பொழியும் அழகா குன்று மேல் குடிகொண்டாய்… குறவர்களின் காவலா மருத மலை முருகா… என் மன...