தனி மனித ஆன்மிகம் விழிப்புற வேண்டும்
தன்னை அறிந்து தீபமேற்றிட வேண்டும்நாடுநலம் பெற வேண்டும் – நாடு நலம் பெற வேண்டும்
நம்முள் ஒளி பரவட்டும் – நாடே ஒளிரட்டும்!
வெளியில் தேடி அலைய வேண்டாம் – உள்ளமே கோயில்
குருட்டு மனதின் கதவைத் திறந்திட வேண்டும்
கருணை கொண்டு காண்போம் – கண்ணீர் துடைப்போம்
கைகள் கோர்த்து நின்றால் – காலம் மாறிடுமே!
உள்ளம் தேடி உள்ளே பார்த்தேன் – இறைவன் கிடைத்தான்
எங்கும் நிறைந்தவன் என்னுள் தோன்றினான்
பொய் பேசாமல் பழி வாங்காமல்
புன்னகை மலர்த்தி வாழ்ந்திடுவோம்
ஒவ்வொரு மனிதனும் ஒளி விளக்கானால்
நாடே தீபாவளி ஆகுமே!
ஜாதி மத பேதம் வைத்து பிரிந்தால்
நாடு நலம் என்றும் நமக்கில்லையே
ஒரே தாய் மடியில் பிறந்தோம் நாம்
ஒரே குடும்பமாய் வாழ்ந்திடுவோம்
தனி மனித ஆன்மிகம் வேரூன்றினால்
தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்குமே!
தனி மனித ஆன்மிகம் விழிப்புற வேண்டும்
கார்த்திகை தீபம் காண்போம் – அண்ணாமலையார் தீபம் கண்டு
தன்னை அறிந்து தீபமேற்றிட வேண்டும்
நாடு நலம் பெற வேண்டும் – நாடு நலம் பெற வேண்டும்
நம்முள் ஒளி பரவட்டும் – நாடே ஒளிரட்டும்!
ஆனந்தமாய் நாமும் பாடுவோம்
அருணை மலையான் திருவடி போற்றி!
அருணாசல சிவ… அருணாசல சிவ…
அருணாசல சிவ.......ஓம்......!

