Tuesday, August 5, 2025

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி


நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?



Gather rich knowledge, let it flood your mind

Knowledge echoes all around you... Simply listen, and inhale it in... Breathe, think, feel, decide, and act... This simple sequence, let it...