Friday, August 8, 2025

மகா மிருத்யுஞ்சய #மந்திரம்


"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |

உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||"

நோய் இல்லாமல் வாழ்வதே மிகப் பெரிய சொத்து என வேதந்திரமும் புராணங்களும் சொல்கின்றன. அத்தனை மிகப் பெரிய சொத்தை அருளக் கூடியது மகா மிருத்யுஞ்ஜய மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னால் கூட அது கவசம் போல் இருந்து நம்மை காக்கும் சக்தி படைத்தது ஆகும்.

சிவனுக்குரிய மிக முக்கியமான மந்திரம் மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். மார்கண்டேயரை போல் சாகா வரம் அருளும் படி சிவனிடம் வேண்டுவதற்கு சமமான மந்திரம் இதுவாகும். காயத்ரி மந்திரத்திற்கு அடுத்த படியாக மிக பழமையான மந்திரமாக கருதப்படும் இந்த மந்திரம் நான்கு வேதங்களில் ரிக் மற்றும் யஜூர் ஆகிய இரண்டு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ பெருமானுக்கு மிருத்யுஞ்சயன் என்ற திருநாமமும் உண்டு. இவரை மரணத்தில் இருந்து விடுவிப்பவராக உள்ளார். நீண்ட வாழ்வளிக்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாக மகாமிருத்யுஞ்சய மந்திரம் உள்ளது. வாழ்வை மீட்டுத் தரும் மந்திரமாகவும் இந்த மந்திரம் உள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

மூன்றாம் பிரையில் சிவனின் ஒளி,உள்ளம் திறந்து அவன் நாமம் பாடு

ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! மூன்றாம் பிரையில் சிவனின் ஒளி, உள்ளம் திறந்து அவன் நாமம் பாடு, ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! மலையும் கடலு...