Sunday, April 6, 2025

வாழ்வில் எல்லாம் நேரும் நல்லதும் கெட்டதும் மாறும் புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும்

இந்த நேரம் எங்கோ மழை பொழிகின்றது 

இதே நேரம் எங்கோ வெயில் சுடுகின்றது 

செடியில் எங்கோ  மலர் துளிர்க்கின்றது 

புயலில்  எங்கோ மரம் விழுகின்றது!

உலகம் இரண்டையும் பார்க்கின்றது 

மனிதன் மனமே மயங்குகின்றது !

வாழ்வில் எல்லாம் நேரும் நல்லதும்  கெட்டதும் மாறும்

புரிந்தால் தெளிந்தால் போதும்  அமைதி வந்தே சேரும் 

புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும் !

இந்த நேரம் எங்கோ  மழலை அழுகின்றது 

இதே நேரம் சாலை மரணம் சிரிக்கின்றது

காதலில் எங்கோ முகம்  சிவக்கின்றது 

கண்ணீர் எங்கோ விழி வழிகின்றது!

உலகம் இரண்டையும் பார்க்கின்றது 

மனிதன் மனமே மயங்குகின்றது!

வாழ்வில் எல்லாம் நேரும் நல்லதும்  கெட்டதும் மாறும்

புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும் !

புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும் !

இந்த நேரம் எங்கோ கிரீடம் தலையேறியது 

இதே நேரம் எங்கோ மானம் பறிபோனது 

எரிமலை எங்கோ கனல் எறிகின்றது 

பனிமலை எங்கோ குளிர் தருகின்றது!

உலகம் இரண்டையும் பார்க்கின்றது 

மனிதன் மனமே மயங்குகின்றது!

வாழ்வில் எல்லாம் நேரும்  நல்லதும்  கெட்டதும் மாறும்

புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும் .

புரிந்தால் தெளிந்தால் போதும் அமைதி வந்தே சேரும் !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

வேதங்களின் மந்திரமாய், இமயத்தில் ஒலித்திடுவேன்

வேதங்களின் மந்திரமாய், இமயத்தில் ஒலித்திடுவேன், என் உயிர் மண்ணோடு பிணைந்தது, வேதங்களுடன் ஒன்றானது, வேதங்களின் மந்திரமாய், இமயத்தில் ஒலித்தி...