Sunday, June 29, 2025

பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாட ணும்!


இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி!

பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாட ணும்!

இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி!

தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார் !

தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்!
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்!
கர்மவினை யென்பார் பிரமனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார்! 

இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி.

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்.

பொது நலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அநேக வித்யாசம்.
புதுப் புது வகையில் புலம்புவ தெல்லாம்
புத்தியை மயக்கும் வெளி வேஷம்!

பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாட ணும். 

இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி.

பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாட ணும்!

இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி.

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்!

பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாட ணும்!



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

வேதங்களின் மந்திரமாய், இமயத்தில் ஒலித்திடுவேன்

வேதங்களின் மந்திரமாய், இமயத்தில் ஒலித்திடுவேன், என் உயிர் மண்ணோடு பிணைந்தது, வேதங்களுடன் ஒன்றானது, வேதங்களின் மந்திரமாய், இமயத்தில் ஒலித்தி...