Monday, March 17, 2025

ஜீவாத்மா - பரமாத்மா வின் வடிவம் பற்றி திருமூலர்

 

ஜீவாத்மாவின் வடிவம் பற்றி திருமூலர் 


மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு

மேவியது கூறது ஆயிரமானால்

ஆவியின் கூறு நூறாயிரத்தொ ன்றாமே. 

திருமந்திரம் பாடல் # 2011

முதலில் ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை 100 ஆக பிரிக்க வேண்டும். அந்த 100 இல் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக பிரிக்க வேண்டும். அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து நூறாயிரம் ஆக பிரிக்க வேண்டும். கணக்கின் பாடி பார்த்தால் ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பிரிக்க வேண்டும். இது அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோனாக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும்.
எனவே 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்

பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரித்தால் 0.1 மில்லி மீட்டர் இதனை 100 ஆக பிரித்தால் =
0.001 மில்லி மீட்டர்

0.001 மில்லி மீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.000001 மில்லி மீட்டர்.

0.000001 மில்லி மீட்டர் இதனை நூறாயிரமாகப் (100,000) பிரித்தால் = 0.00000000001 மில்லிமீட்டர்

திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 மில்லிமீட்டர்.

தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென் அணுவின் சுற்றளவு 0.000000212 எனப் பிரித்திருக்கின்றது. 

திருமூலர் அதற்கும் கீழே சென்று ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லி
மீட்டராகக் திருமூலர் கூறியிருக்கின்றார்.

பரமாத்மா வடிவம் பற்றி திருமூலர்

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 

திருமந்திரம் பாடல் # 2008

அணுவிற்குள் அணுவாகவும் அதற்கு அப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லவர்களுக்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம். ஜீவாத்மாவுக்கு கூறப்பட்ட அணுவின் வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்.

ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லிமீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் =
0.0000000000000001

மனிதனின் ஜீவாத்மா 0.00000000001 மில்லிமீட்டர் அளவு இருக்கும். இந்த ஜீவாத்மா அணுக்களுக்குள் அணுவாக இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார். அணுவிற்குள் மனித ஜீவாத்மா இருப்பதாகவும் அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும் போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Telugu bhasha, sundara bhasha

"Ooooh… Aaaah… Telugu bhasha, sundara bhasha…" "नमस्ते (Namaste) – నమస్కారం (Namaskāram) – Hello!  धन्यवाद (Dhanyavaad) – ధన్...